/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தென்மேற்கு பருவ மழை பெய்யாததால் பெருத்த ஏமாற்றம்! நீர் நிலைகள் வறண்டு கிடப்பதால் விவசாயம் பாதிப்பு
/
தென்மேற்கு பருவ மழை பெய்யாததால் பெருத்த ஏமாற்றம்! நீர் நிலைகள் வறண்டு கிடப்பதால் விவசாயம் பாதிப்பு
தென்மேற்கு பருவ மழை பெய்யாததால் பெருத்த ஏமாற்றம்! நீர் நிலைகள் வறண்டு கிடப்பதால் விவசாயம் பாதிப்பு
தென்மேற்கு பருவ மழை பெய்யாததால் பெருத்த ஏமாற்றம்! நீர் நிலைகள் வறண்டு கிடப்பதால் விவசாயம் பாதிப்பு
ADDED : அக் 02, 2024 11:30 PM

தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் பெய்யும்.
தென்மேற்குப் பருவ மழை சராசரியாக மாவட்டத்தில் 28.7 சதவீதம் இருக்கும்.இது வடகிழக்கு பருவமழை ஒப்பிடும் பொழுது குறைவு என்றாலும் பயிர் சாகுபடியை துவக்குவதற்கு தேவையான சூழல் இம்மாதங்களில் நிலவுவதால் தென்மேற்கு பருவமழை சீராக பெய்வது அவசியமாகும்.
மாவட்டத்தில் கோமுகி மற்றும் மணிமுக்தா ஆகிய இரு அணைகள் முக்கிய நீர் நிலை ஆதாரங்களாக உள்ளன.அதுமட்டுமன்றி 311 ஏரிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.
பருவ மழை காலங்களில் வரத்து வாய்க்கால் மூலம் நீர்நிலைகளுக்கு சென்று தண்ணீர் தேங்குவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்க காரணமாக உள்ளது.மாவட்டத்தில் நெல், கரும்பு ஆகிய நன்செய்ப் பயிர்கள் அதிக பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது.
குறிப்பாக சம்பா பருவ நெல் நடவு செய்வதற்கு தேவையான அளவு தண்ணீர் இருந்தால் மட்டுமே குறித்த தருணத்தில் சாகுபடி மேற்கொள்ள முடியும். இதற்கு தென்மேற்குப் பருவமழை கை கொடுப்பது அவசியமாகும். நீர்நிலைகளில் தண்ணீர் இன்றி போனால் கிணற்று பாசனம் பாதிக்கப்பட்டு நெல் நடவு கேள்விக்குறியாகி விடும்.
கடந்த ஆண்டு மே மாதத்தில் பெய்த கோடை மழை காரணமாக கோமுகி, மணிமுக்தா ஆகிய இரு அணைகளும் நிரம்பின. ஏரி குளங்களுக்கும் ஓரளவு நீர் வரத்து கிடைத்தது.
அதன் பிறகு செப்டம்பர் இறுதி வரை எதிர்பார்த்த மழை பெய்யாத போதிலும் துவக்கத்தில் கிடைத்த மழையால் ஓரளவு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் பாதுகாத்தது.
இச்சூழ்நிலையில் இவ்வாண்டு கோடை மழையும் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை.
அதைத்தொடர்ந்து தென்மேற்கு பருவ மழை துவங்கியதில் இருந்து இதுவரை கனமழை பெய்யாமல் வெறும் தூறலோடு வானம் போக்கு காட்டுகிறது.
இதனால் அணைகளுக்கு இன்னும் எதிர்பார்த்த தண்ணீர் வரத்து கிடைக்கவில்லை.
அதிலும் குறிப்பாக மணிமுத்தா அணையின் ஷட்டர்கள் பழுதடைந்ததால் தென்மேற்குப் பருவ மழையில் கிடைத்த தண்ணீர் முழுவதும் வெளியேறிவிட்டது.தென்மேற்குப் பருவ மழை முடியும் தருவாயில் உள்ளதால் இதுவரை 12 சதவீத மழை மட்டுமே மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது.
மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரி குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. சில ஏரிகளில் மட்டும் பள்ளமான பகுதியில் குட்டை போல் தண்ணீர் தேங்கி பரிதாபமாக காட்சியளிக்கிறது.
இதனால் விவசாயிகள் பலர் நெல் சாகுபடி துவக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இது மாவட்டத்தில் தானிய உற்பத்தியை பெரும் அளவு பாதிக்கும் நிலை உருவாக்கியுள்ளது.
தென்மேற்கு பருவமழை முடியும் தருவாயிலாவது கனமழை பெய்து நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து கிடைக்க வேண்டுமென விவசாயிகள் ஏக்கத்துடன் எதிர்பார்க்கின்றனர்.