ADDED : ஏப் 11, 2026 10:22 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பைக்குகள் மோதிய விபத்தில் கொத்தனார் இறந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த கரடிசித்துாரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ரகுமான், 27; கொத்தனார். இவர், நேற்று முன்தினம் இரவு ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக்கில் ஆலத்துார் சென்றார்.
மாதவச்சேரியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் ஸ்கூட்டரில் வந்தபோது, திருக்கனங்கூர் சாலையில் எதிரே வந்த ரகுமான் பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த ரகுமான் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கள்ளக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
