/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பல்வேறு இடங்களில் பைக் திருட்டு
/
பல்வேறு இடங்களில் பைக் திருட்டு
ADDED : அக் 23, 2024 07:12 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் வெவ்வேறு தினங்களில் திருடுபோன பைக் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த எரவார் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி,64. இவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்ப்பதற்காக, பைக்கில் (டி.என்15 எம் 7612) கடந்த ஜூன் 26ம் தேதி வந்தார். மருத்துவமனை வளாகத்தில் பைக்கினை நிறுத்திவிட்டு, சென்றவர் திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை.
அதேபோல், அகரகோட்டலத்தில் வீட்டிற்கு முன் நிறுத்தப்பட்ட தனசேகரன் மற்றும் அருணாச்சலத்தின் பைக்குகள், கள்ளக்குறிச்சியில் தனியார் லாட்ஜ் அருகே நிறுத்தப்பட்டிருந்த அன்புரோஸ் என்பவரது பைக், தனியார் மருத்துவமனைக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த அன்பரசுவின் பைக் ஆகியவை காணாமல் போனது.
இது குறித்து பைக் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.