/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக் திருட்டு: போலீஸ் விசாரணை
/
பைக் திருட்டு: போலீஸ் விசாரணை
ADDED : மார் 22, 2025 08:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பைக் திருடுபோனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்தவர் ஆராவமுதன் மகன் வெங்கடேஷ்,30; இவர் கடந்த 18ம் தேதி சுந்தரவிநாயகர் கோவில் தெருவில் உள்ள தனியார் வங்கி முன், தனது பைக்கை நிறுத்திவிட்டு தனியார் பயிற்சி மையத்திற்கு சென்றார்.
வகுப்பு முடிந்து வந்து பார்த்த போது, பைக்கை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.