நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; பைக் திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்துாரை சேர்ந்தவர் சக்திவேல்,48; இவர் கடந்த 8ம் தேதி பைக்கை போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த போது, பைக்கை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

