/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மரக்கிளை முறிந்து பைக்கில் சென்றவர் காயம்
/
மரக்கிளை முறிந்து பைக்கில் சென்றவர் காயம்
ADDED : டிச 06, 2024 05:56 AM
திருக்கோவிலுார் : அரகண்டநல்லுாரில் பைக்கில் சென்றவர் மீது புளியமர கிளை முறிந்து விழுந்து படுகாயமடைந்தார்.
திருக்கோவிலுார் அடுத்த அரகண்டநல்லுாரைச் சேர்ந்தவர் முருகன், 55; திருக்கோவிலுாரில் தனியார் பைனான்ஸ் கம்பெனியில் கிளை மேலாளராக உள்ளார். இவர், நேற்று காலை 7:00 மணியளவில் வேலைக்கு பைக்கில் திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
தேவனுார் கூட்டு சாலை அருகே சென்றபோது சாலையோரம் இருந்த புளிய மரத்தின் கிளை முறிந்து முருகன் மீது விழுந்தது. இதில் மர கிளைக்குள் சிக்கி தலையில் படுகாயடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
திருக்கோவிலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.