ADDED : ஜூலை 02, 2026 01:32 AM
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடந்தது. ஊராங்கனி கிராமத்தை சேர்ந்த முனியன், 45; அவரது சகோதரர் சுப்பிரமணி, 40; ராஜீவ் காந்தி, 33; ஆகியோர் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தனர்.அங்கு வந்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மகன்கள் சிவா, 32; சதீஷ், 34; பச்சமுத்து மகன் வினோத், 35; ஆகியோர் சேர்ந்து, தரமற்ற சிமென்ட் சாலை போடக்கூடாது, வேலையை நிறுத்துமாறு கூறினார்.
அதற்கு அவர்கள், ஒப்பந்ததாரர் கூறினால் மட்டும் வேலையை நிறுத்த முடியும், அதுவரை வேலை செய்வோம் என்று கூறினர்.
இதை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து சிவா, சதீஷ், வினோத் மற்றும் சுப்பிரமணி ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
