ADDED : ஜன 04, 2025 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; பா.ஜ., கொடி கம்பம் சேதம் குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த கனங்கூர் பஸ் நிறுத்தம் அருகே பா.ஜ., கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அவ்விடத்தில் ஏற்கனவே மூன்று முறை பா.ஜ., கொடி கம்பத்தை மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் கொடி கம்பம் அருகே சிசிடிவி., கண்காணிப்பு கேமராக்கள் அமைத்த நிலையில், கடந்தாண்டு விநாயகர் சிலை ஊர்வலத்தின் போதுயும் உடைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 1ம் தேதி இரவு 11.30 மணியளவில் மீண்டும் பா.ஜ., கொடி கம்பத்தை மர்ம ஆசாமிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக பா.ஜ., ஒன்றிய துணை தலைவர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.