/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம்
/
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம்
ADDED : அக் 14, 2024 08:50 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் ராஜேஷ் வரவேற்றார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மாநில தலைவர் அமர்பிரசாத்ரெட்டி பங்கேற்று பேசினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மகளிர் மற்றும் பட்டியலின மக்கள், புதிய வாக்காளர்களை அதிகளவில் சேர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை வீடு, வீடாக சென்று தெரிவிக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
வேலுார் பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன், மாவட்ட பார்வையாளர் ராஜ்குமார், உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் ஜீவானந்தம், பொது செயலாளர் தியாகராஜன், துணை தலைவர்கள் சர்தார், கருணாகரன், கஜேந்திரன், கிருஷ்ணவேணி, மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, பிரகாஷ், முருகன், வெண்ணிலா பங்கேற்றனர்.