ADDED : மார் 13, 2024 12:04 AM

அ நிறம் | அளவு
சங்கராபுரம், : சங்கராபுரத்தில் பா.ஜ., சார்பில் சட்டசபை தொகுதி அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு தொகுதி அமைப்பாளர் பிரகாஷ், இணை அமைப்பாளர் செல்வம், பார்வையாளர் அருண் நாராயணன் தலைமை தாங்கினர். ஒன்றிய தலைவர்கள் வேல்முருகன், ராமச்சந்திரன், பாக்யராஜ் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் அருள் அலுவலகத்தைத் திறந்து வைத்து கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஓ.பி.சி., அணி மாநிலச் செயலாளர் செல்வநாயகம், மாநில சிறுபான்மையினர் அணி துணைத் தலைவர் அசோக், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ், செயலாளர்கள் கிருஷ்ணமுர்த்தி, ஹரி, தமிழரசி, கிருஷ்ணவேணி, மலையம்மா, பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.
