ADDED : மார் 14, 2026 04:48 AM
மூங்கில்துறைப்பட்டு: மார்ச் 14-: மேல் சிறுவளுர் கூட்ரோட்டில் பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேல் சிறுவளுர் கூட்ரோட்டில் 4 வழிச்சாலை அமைக்கும் பணியில், முறையாக ஆக்கிரமிப்பு அகற்றி பஸ் நிறுத்தம் அமைக்காத நெடுஞ்சாலை துறையும், அதற்கு துணை போகும் வருவாய்த்துறையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கராபுரம் பா.ஜ., வடக்கு ஒன்றிய தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் துரைவேல், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஜெயதுரை, ராஜிசுந்தரம் முன்னிலை வகித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பாலச்சந்திரன், மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் அறிவழகன், ஜோதிநாதன், செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய துணைத் தலைவர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.
