/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முனிவாழையில் பா.ஜ., சக்தி கேந்திர உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம்
/
முனிவாழையில் பா.ஜ., சக்தி கேந்திர உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம்
முனிவாழையில் பா.ஜ., சக்தி கேந்திர உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம்
முனிவாழையில் பா.ஜ., சக்தி கேந்திர உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம்
ADDED : அக் 16, 2024 09:30 PM

ரிஷிவந்தியம்: முனிவாழை கிராமத்தில் பா.ஜ., சக்தி கேந்திர உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம் நடந்தது.
ரிஷிவந்தியம் அடுத்த முனிவாழையில் நடந்த கூட்டத்திற்கு, பா.ஜ., மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய தலைவர் சின்னதுரை வரவேற்றார். பொதுச்செயலாளர் சரவணன் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பூத்களிலும் புதிதாக 200 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், புதிய வாக்காளர்கள், மகளிர் மற்றும் பட்டியலின சமூக மக்களை அதிகளவில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில், வேலுார் பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் குணா, மாவட்ட பார்வையாளர் ராஜ்குமார், ஓ.பி.சி., அணி மாநில செயலாளர் செல்வநாயகம், மாவட்ட நிர்வாகிகள் ராஜேஷ், கிருஷ்ணமூர்த்தி, கருணாகரன், கஜேந்திரன், வெண்ணிலா, உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள் ஜீவானந்தம், கொளஞ்சியப்பன், வர்த்தக பிரிவு சிவகுரு உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.