/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மறுவாழ்வு பள்ளி மாணவர்களுக்கு போர்வை
/
மறுவாழ்வு பள்ளி மாணவர்களுக்கு போர்வை
ADDED : ஜன 16, 2024 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : ஆலத்துார் மறுவாழ்வு பள்ளி மாணவர்களுக்கு கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம் சார்பில் போர்வைகள் வழங்கப்பட்டன.
ஆலத்துார் புனித அன்னாள் மறுவாழ்வு பள்ளியில் பொங்கல் பண்டிகை யையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பள்ளி வளாகத்தில் பொங்கல் படையலிட்டு, அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து பள்ளியில் உள்ள மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் 30 பேருக்கு போர்வைகளை ரோட்டரி சங்கத் தலைவர் இம்மானுவேல் சசிக்குமார் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தேர்வு செயலாளர் சிவக்குமார், முன்னாள் தலைவர் ராமலிங்கம், ராஜேந்திரன், செயலாளர் பாபு, பள்ளி தாளாளர் ஜான், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.