
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கிளை தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் சங்கம் சார்பில், ரத்த தான முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் நடந்த முகாமினை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார். செயற்பொறியாளர்கள் மயில்வாகணன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொறியாளர் சங்க தலைவர் எழிலரசன், செயலாளர் ரங்கசாமி, பொருளாளர் பாண்டுரங்கன் மற்றும் உறுப்பினர்கள் பலர் பங்கேற்று ரத்த தானம் வழங்கினர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி ரத்த வங்கி மருத்துவ அலுவலர் விஜயகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்தம் சேகரித்தனர். தொடர்ந்து ரத்த தானம் வழங்கிய அனைத்து மின்வாரிய பொறியாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.