/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில் ரத்த தான முகாம்
/
முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில் ரத்த தான முகாம்
ADDED : ஆக 27, 2025 07:06 AM

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம் சார்பில் முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில் ரத்த தான முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மேலுார் முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில் ரோட்டரி சங்கம் மற்றும் மேலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய ரத்த தான முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட தேர்வு ஆளுனர் சொந்தில்குமார், மண்டல துணை ஆளுனர் மூர்த்தி முன்னிலை வகித்தனர். முருகா பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் பாஸ்கர் வரவேற்றார். முருகா பாலிடெக்னிக் கல்லுாரி தாளாளர் ரஹமத்துல்லா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்தார்.
ரத்த தான பணிகளை கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கி அதிகாரி விஜயகுமார் தலைமையில், மேலுார் வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் மேற்கொண்டனர். 50க்கும் மேற்பட்ட யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.
ரோட்டரி சங்க செயலாளர் பிரகாஷ், பொருளாளர் முருகன், கல்லுாரி செயலாளர் அல்லாபக்ஷ், துணை முதல்வர் முகமது சபீக், கல்லுாரி தலைவர் ஜெகநாதன். என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் விஜயராஜ், உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். முகாமினை இமானுவேல் சசிகுமார் ஒருங்கிணைத்தார்.

