/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுாரில் ரத்ததான முகாம்
/
திருக்கோவிலுாரில் ரத்ததான முகாம்
ADDED : மார் 23, 2025 10:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், பகத்சிங் நினைவு தினத்தையொட்டி, ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் ரத்ததான முகாம் நடந்தது.
சப் கலெக்டர் ஆனந்த் குமார் சிங் தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் முருகன், ரோட்டரி கிளப் செயலாளர் கோதம்சந்த், டாக்டர் கமலசேகரன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் சரவணன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
முண்டியம்பாக்கம், அரசு மருத்துவக்க்கல்லுாரி ரத்த வங்கி மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு, முகாமில் பங்கேற்ற 50 இளைஞர்களிடம் ரத்த தானம் பெற்றனர்.
ஏற்பாடுகளை, நிர்வாகிகள் ராமன், விஜய், கணேஷ் செய்தனர்.