/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் ரத்ததான முகாம்
/
கள்ளக்குறிச்சியில் ரத்ததான முகாம்
ADDED : ஏப் 14, 2025 06:39 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி, தியான மண்டபத்தில் ஜெயின் சங்கம், இளைஞரணி மற்றும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ரத்ததான முகாம் நடந்தது.
சங்க தலைவர் தேஜ்ராஜ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். நிர்வாகிகள் சஜ்ஜன்மல், ஹனுமந்த் முன்னிலை வகித்தனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை குருதி வங்கி டாக்டர் விஜயகுமார் தலைமையிலான, மருத்துவ குழுவினர் ரத்த தான பணிகளை மேற்கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து விளக்கினார். இதில், 50 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. பணிகளை சுகாதார ஆய்வாளர்கள் விக்னேஷ்வரன், வசந்தன், பாலா உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.

