
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி, ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் ரத்த தான முகாம் நடந்தது.
முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் சுரேந்திரன் வரவேற்றார். மோகன் வாழ்த்தி பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக திருச்சி உயிர்த்துளி ரத்த தானம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக அலுவலர் பிரபாகரன் பங்கேற்றார். அவர் ரத்ததானம் செய்வதன் அவசியம், மது உள்ளிட்ட போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருத்தல் உள்ளிட்டவைகள் குறித்து பேசி, மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.
முகாமில் 50 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உதவி பேராசிரியர் ேஹமலதா நன்றி கூறினார்.

