
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம் : வாணாபுரம் அடுத்த மேலப்பழங்கூரில் அறம் பழகு அறக்கட்டளை சார்பில், ரத்த தான சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
இதில், டாக்டர்கள் காஜிதா நுஸ்ஹத், சிவா ஆகியோர் ரத்த தானம் செய்வதன் அவசியம் மற்றும் நன்மை உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர். தொடர்ந்து, டாக்டர் விஜயகுமார் மேற்பார்வையில், அலுவலர்கள் ரத்தம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மொத்தம், 50 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. முகாமில், செவிலியர்கள் திருமாலதி, வினோத்குமார், கயல்விழி, லட்சுமி, ஆய்வக நுட்புணர் செல்வம், சிவசத்தியமூர்த்தி, அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பழங்கள், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

