
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். இந்திய கம்யூ., மாவட்ட செயற்குழு ஏழுமலை, ஒன்றிய கவுன்சிலர் சசிக்குமார், ஒன்றிய செயலாளர் சிவாஜி, நகர செயலாளர் துரை தாகப்பிள்ளை முன்னிலை வகித்தனர். தி.மு.க., ஒன்றிய செயலாளர் கதிரவன், காங்., மாவட்ட தலைவர் இதயத்துல்லா, அரசு தலைமை மருத்துவர் ராஜ்மோகன், டாக்டர்கள் கார்த்திக், வளர்மதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முகாமில் 35 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட ரத்த தான கழக கன்வீனர் விஷ்ணுகுமார், முரளி, ஜெயப்பிரகாஷ், வழக்கறிஞர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வெண்மதி நன்றி கூறினார்.

