ADDED : செப் 04, 2026 07:48 AM

திருக்கோவிலுார் : விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி , விழுப்புரம் ஜங்ஷன் அரிமா சங்கம் மற்றும் கல்லுாரி லியோ சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த முகாமிற்கு, கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். செயலாளர் ஏழுமலை, பொருளாளர் சுப்ரமணியன், துணைத் தலைவர் முஸ்டாக் அகமது, தாளாளர் பழனிராஜ், இணைச் செயலாளர் சத்திய நாராயணன், விழுப்புரம் ஜங்ஷன் அரிமா சங்க தலைவர் விஜய சுந்தரம், செயலாளர் பாஸ்கரன், மாவட்ட தலைவர் சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர் ஷாலினி தலைமையிலான மருத்துவக் குழுவினர் கல்லுாரி மாணவர்களிடமிருந்து 60 யூனிட் ரத்ததானம் பெற்றனர். முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர். கல்லுாரி துணை முதல்வர் மீனாட்சி நன்றி கூறினார்.
