ADDED : அக் 01, 2026 05:11 AM

கள்ளக்குறிச்சி: பங்காரம் லஷ்மி கல்லுாரியில் நடந்த ரத்ததான முகாமில் 40 மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமிற்கு கல்லுாரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், பொருளாளர் சாந்தி, இயக்குனர் சரவணன், ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் பழனியம்மாள் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட ரத்த வங்கி அதிகாரி விஜயகுமார், நடமாடும் மருத்துவ அதிகாரி சிவபிரசாத், சுகாதார ஆய்வாளர் மகாலிங்கம், அசலாம்பால் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் ரத்ததானம் பெற்றனர். இதில் கல்லுாரி துணை முதல்வர்கள், பேராசிரிர்கள், மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர்.
முகாமில் ரத்ததானம் செய்த 40 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.
