ADDED : ஜன 30, 2024 04:11 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் மாணவர்கள் சார்பில் மேலத்தாழனுார் கிராமத்தில் பட்டிமன்றம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் நாராயணசாமி வரவேற்றார். கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் ஏழுமலை, தாளாளர் பழனிராஜ், துணைத் தலைவர் முஸ்டாக் அகமது, நிர்வாக அலுவலர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
யாருக்கு என்னுடைய முதல் வணக்கம் என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தில், 'பெற்றோர்களுக்கு' என மாணவர்கள் சரத்குமார், ஷகிலா பானு, மாதேஷ், யாழ்ச்செல்வன் வாதங்களை முன்வைத்தனர்.
'ஆசிரியர்களுக்கே' என பிரியதர்ஷினி, அகிலன், பன்னீர்செல்வம், துர்கா ஆகியோரும், 'இளைஞர்களுக்கே' என்ற தலைப்பில் கவுதம், ராஜேஷ், சிவா, விஷ்ணு ஆகியோரும் வாதிட்டனர்.
பட்டிமன்ற நடுவராக டாக்டர் மீனாட்சி செயல்பட்டார். கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.