/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
துாக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு
/
துாக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு
ADDED : ஏப் 21, 2025 10:54 PM
கள்ளக்குறிச்சி, ; கள்ளக்குறிச்சியில் துாக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி, சிதம்பரம் பிள்ளை தெரு பகுதியில் உள்ள காளி கோவில் அருகே, பெண் ஒருவர் துாக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக போலீசாருக்கு நேற்று மதியம் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., தேவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், இறந்த பெண் அசகளத்துாரைச் சேர்ந்த கனகராஜ் மகள் சூரியகலா, 22; என்பதும், கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கில் கடந்த 2 ஆண்டுகளாக செவிலியராக பணிபுரிவதும் தெரிந்தது.
சூரியகலா தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.