/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் கிளை நூலகத்திற்கு புத்தகம் வழங்கல்
/
அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் கிளை நூலகத்திற்கு புத்தகம் வழங்கல்
அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் கிளை நூலகத்திற்கு புத்தகம் வழங்கல்
அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் கிளை நூலகத்திற்கு புத்தகம் வழங்கல்
ADDED : ஜன 17, 2025 06:53 AM

திருக்கோவிலூர்: மணலூர்பேட்டை நூலகத்திற்கு முன்னாள் மாணவர் அமைப்பின் சார்பில் புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
திருக்கோவிலூர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 1984--86ம் கல்வி ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள், கோவல் நண்பர்கள் குழு என்ற அமைப்பை உருவாக்கி நல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மணலூர்பேட்டை நூலகத்திற்கு புத்தகங்களை பரிசாக வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. வாசகர் வட்ட குழு தலைவர் அய்யாக்கண்ணு வரவேற்றார். அரிமா சங்க மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், மாவட்ட தலைவர் அம்மு ரவிச்சந்திரன், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் பாலாஜி பூபதி முன்னிலை வகித்தனர்.
கோவல் நண்பர்கள் குழுவை சேர்ந்த கைத்தறி துறை இயக்குனரும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான சண்முகசுந்தரம் தலைமை தாங்கி, நூலகத்திற்கான புத்தகங்களை வழங்கினார். நூலகர் அன்பழகன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் சிவனேசன், செந்தமிழ் அரசன், செல்வகணபதி, காத்தமுத்து உள்ளிட்ட வாசகர்கள் பலரும் கலந்து கொண்டனர். வாசகர் வட்ட பொருளாளர் சந்திர மோகன் நன்றி கூறினர்.