/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புத்தகத் திருவிழா : கலெக்டர் ஆய்வு
/
புத்தகத் திருவிழா : கலெக்டர் ஆய்வு
ADDED : பிப் 16, 2025 11:09 PM

கள்ளக்குறிச்சி,: கள்ளக்குறிச்சியில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.
இங்கு, அடிப்படை வசதிகள், துாய்மை மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார். பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அரங்கை எளிதில் பார்வையிட்டு புத்தகங்களை தேர்ந்தெடுக்கும் வகையில்அமைக்கப்பட்ட சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து அரங்கில் சேகரமாகும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றிடவும், கழிவறைகளை சுத்தம் செய்திடவும் நகராட்சி அதிகாரிகளுக்குஉத்தரவிட்டார். மேலும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு காவல் துறையின் மூலம்போக்குவரத்து உடனுக்குடன் சீரமைக்கப்பட வேண்டும் அறிவுறுத்தினார்.

