/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புத்தக திருவிழா ஆலோசனை கூட்டம்
/
புத்தக திருவிழா ஆலோசனை கூட்டம்
ADDED : பிப் 05, 2025 10:18 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 3வது புத்தகத் திருவிழா வரும் 14 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவை அமைச்சர் வேலு துவக்கி வைக்கிறார். புத்தக திருவிழாவில் பல்வேறு பதிப்பகங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிவியல், சிந்தனை, சிறுகதை, கவிதை உள்ளிட்ட பல்வேறு வகை புத்தகங்கள், அரங்குகளில் விற்பனை செய்யப்பட உள்ளன.
இந்த நிலையில் விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
இதில் கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, எடுத்துரைத்தார். இதில் டி.ஆர்.ஓ., ஜீவா, சப் கலெக்டர் ஆனந்த் குமார் சிங் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த விழாவில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், சிறப்புரைகள், மருத்துவ முகாம்கள், பொழுதுபோக்கு, உணவு திருவிழா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற உள்ளன.