/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேவபாண்டலத்தில் நுாலக வார விழா
/
தேவபாண்டலத்தில் நுாலக வார விழா
ADDED : டிச 07, 2024 06:45 AM

சங்கராபுரம்; சங்கராபரம் அடுத்த தேவபாண்டலம் கிளை நுாலகம் சார்பில் நுாலக வார விழா நடந்தது.
விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் ஞானமூர்த்தி தலைமை தாங்கினார். வாசகர் வட்ட தலைவர் தாமோதிரன் வரவேற்றார்.
துணை தலைவர் முருககுமார், ஊராட்சி தலைவர் பாப்பாத்தி நடராஜன், அரிமா சங்க மாவட்ட தலைவர் வேலு, வாசகர் வட்ட தலைவர் ராஜா முன்னிலை வகித்தனர்.
விழாவில் ஓய்வு பெற்ற கலால் உதவி ஆணையர் சண்முகசுந்தரம் 5,000 ரூபாய் செலுத்தி நுாலக பெரும்புரவலராக சேர்ந்தார்.
கடலுார் மாவட்ட உலக திருக்குறள் பேரவை தலைவர் பாஸ்கரன், ஆனந்தராசு, ராமு, சுமதி ஆகியோர் 1,000 ரூபாய் செலுத்தி புரவலராக சேர்ந்தனர்.
இன்னர்வீல் சங்க தலைவி சுபாஷினி ரமேஷ் 2,000 ரூபாய் செலுத்தி பள்ளி மாணவர்களை நுாலக புரவலராக இணைத்தனர்.
விழாவில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். நுாலகர் மலர்கொடி நன்றி கூறினார்.