/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாணவியை கடத்திய வழக்கில் வாலிபர் 'போக்சோ'வில் கைது
/
மாணவியை கடத்திய வழக்கில் வாலிபர் 'போக்சோ'வில் கைது
மாணவியை கடத்திய வழக்கில் வாலிபர் 'போக்சோ'வில் கைது
மாணவியை கடத்திய வழக்கில் வாலிபர் 'போக்சோ'வில் கைது
ADDED : பிப் 05, 2024 05:45 AM

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே கல்லுாரி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த பரமேஸ்வரிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை, 23; இவர், தனியார் கல்லுாரியில் படிக்கும் 17 வயது மாணவியை கடந்த 21ம் தேதி கடத்திச் சென்றார்.
பின், திருச்செங்கோட்டில் உள்ள மைத்துனர் வஜ்ரவேலு, 28; வீட்டில் தங்கி மாணவியை திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக இருந்தார்.
இது குறித்த புகாரின்பேரில் உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் மாணவியை கடத்தி திருமணம் செய்த ராஜதுரையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த வஜ்ரவேலுவையும் கைது செய்தனர்.