ADDED : செப் 01, 2026 07:32 PM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே பாம்பு கடித்து 12 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருக்கோவிலுார் அடுத்த அத்தண்டமருதுார் , பிடாரம்பட்டியைச் சேர்ந்தவர் பச்சையப்பன் மகன் அருணேஷ், 12; ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் காலை 6:30 மணிக்கு எழுந்து பார்த்தபோது, அருனேஷ்ன் கழுத்தில் பாம்பு கடித்திருப்பது தெரியவந்தது. உடனடியாக திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்துச் சென்றபோது, செங்கல்பட்டு அருகே சென்றபோது மூச்சுத் திணறல் ஏற்பட்ட சூழலில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
