/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பஸ் மோதி சிறுவன் பலி; டிரைவருக்கு 2 ஆண்டு சிறை
/
பஸ் மோதி சிறுவன் பலி; டிரைவருக்கு 2 ஆண்டு சிறை
ADDED : மார் 02, 2024 06:34 AM
கள்ளக்குறிச்சி : தனியார் பஸ் மோதி சிறுவன் இறந்த வழக்கில், டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி அடுத்த அசகளத்துார், அண்ணா நகரைச் சேர்ந்தவர் செந்தில் மகன் அரிகிருஷ்ணன்,5; இவர், கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி மாலை 5:20 மணிக்கு அசகளத்துார் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது கள்ளக்குறிச்சி - வேப்பூர் நோக்கிச் சென்ற தனியார் பஸ், சிறுவன் அரிகிருஷ்ணன் மீது மோதியது.
படுகாயமடைந்த சிறுவன் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர், இறந்தார்.
இதுதொடர்பாக பஸ் டிரைவர் ஏ.மரூர் கிராமத்தை சேர்ந்த சத்தியபிரகாஷ்,41; என்பவரை கைது செய்த வரஞ்சரம் போலீசார், அவர் மீது கள்ளக்குறிச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்-1ல் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் செந்தமிழ்ச்செல்வி ஆஜரானார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஹரிஹரசுதன், தனியார் பஸ் டிரைவர் சத்தியபிரகாஷிற்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.6,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

