ADDED : நவ 29, 2026 08:02 PM
அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அருகே கிரிக்கெட் விளையாடச் சென்ற சிறுவன் குட்டையில் தவறி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரகண்டநல்லுார் அடுத்த வடகரைதாழனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்பாபு மகன் சக்தி, 13; அதே பகுதியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இன்று (நவ.,29) நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்றவர், விளையாடி முடித்துவிட்டு அரிகிருஷ்ணன் என்பவர் நிலத்திலிருந்த குட்டையில் குளித்தார்.
அப்போது நீரில் மூழ்கினார். உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே சக்தி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
