/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சுடு தண்ணீர் கொட்டி சிறுவன் படுகாயம்
/
சுடு தண்ணீர் கொட்டி சிறுவன் படுகாயம்
ADDED : பிப் 19, 2025 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே சுடு தண்ணீர் கொட்டி, 7 வயது சிறுவன் படுகாயமடைந்தார்.
உளுந்துார்பேட்டை அடுத்த மேப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன் மகன் கிருஷ்வந்த், 7; அதேபகுதி தனியார் பள்ளியில், 2ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் தீபிகா வீட்டின் பின்புறம் அலுமினிய பாத்திரத்தில், தண்ணீரை கொதிக்க வைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சென்ற சிறுவன் தவறி விழுந்ததில் பாத்திரத்தில் இருந்த சுடு தண்ணீர், அவரது உடலில் கொட்டியது. இதில், படுகாயமடைந்த அவர் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உளுந்துார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.