ADDED : செப் 21, 2026 03:42 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: பாதுார் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் நடந்தது.
கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 13ம் தேதி துவங்கியது. அன்று இரவு திருப்பல்லக்கிலும், விசேஷ திருமஞ்சனம், ததியாராதனமும் நடந்தது. தொடர்ந்து தினமும் சவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை மற்றும் வீதியுலா நடந்தது.
நேற்று காலை 9:00 மணியளவில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் சுவாமி எழுந்தருளச் செய்து தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
