தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கிளை வாய்க்கால்களை துார்வார நடவடிக்கை தேவை

கிளை வாய்க்கால்களை துார்வார நடவடிக்கை தேவை

கிளை வாய்க்கால்களை துார்வார நடவடிக்கை தேவை


ADDED : அக் 30, 2024 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2024 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிக்குச் செல்லும் கிளை வாய்க்கால்களை துார்வார பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூங்கில்துறைப்பட்டு பகுதியைச் சுற்றி 45க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களும் விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.

விவசாயித்திற்கு ஏரி பாசனத்தையே நம்பியுள்ளனர்.

ஆனால், ஏரிக்கு வரும் கிளை வாய்க்கால்கள் துார்ந்து ஏரிக்கு தண்ணீர் வர இயலாத நிலை, உள்ளது.

இதனால், பாசனத்திற்கு தண்ணீர் இன்றி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கிளை வாய்க்கால்களை துார் வார வேண்டும் என விவசாயிகள் பொது பணித்துறை அலுவலகத்தில் பல முறை புகார் தெரிவித்தும். அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

பருவ மழை தீவிரமடைவதற்குள் அனைத்து ஏரிகளுக்கு செல்லும் கிளை கால்வாய்களை துார் வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us