ADDED : நவ 23, 2024 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : உளுந்துார்பேட்டை நகர் கிராம கிளை அஞ்சலகம் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி தலைமை தாங்கினார். விருத்தாசலம் கோட்ட கண்காணிப்பாளர் அப்துல் லத்தீப் வரவேற்றார்.
விழாவில் மணிகண்ணன் எம்.எல்.ஏ., கிளை அஞ்சலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். விழாவில், சேமிப்பு கணக்கு, செல்வ மகள் சேமிப்பு திட்டம், ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகிய வற்றை துவக்கி வைத்தனர்.
பின்னர், கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் செயல்பட்டு வரும் மரசிற்பத்திற்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றதற்காக அதனை கவுரவிக்கும் வகையில் தபால் உரை வெளியிடப்பட்டது.