தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ துாய்மை பணியாளர்களுக்கான காலை உணவு திட்டம் துவக்கம்

 துாய்மை பணியாளர்களுக்கான காலை உணவு திட்டம் துவக்கம்

 துாய்மை பணியாளர்களுக்கான காலை உணவு திட்டம் துவக்கம்


ADDED : பிப் 10, 2026 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 05:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துாய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவு திட்டம் துவங்கியது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கான காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இதனையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துாய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவு திட்டத்தை சுமங்கலி தனியார் மண்டபத்தில் கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்து, அவர்களுடன் அமர்ந்து காலை உணவினை சாப்பிட்டார்.

தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகளில் பணிபுரியும் 475 பேருக்கும், 5 பேரூராட்சிகளில் பணிபுரியும் 321 பேருக்கும் காலை உணவு வழங்கப்பட உள்ளது. மேலும், துாய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தொடர்ந்து தரமாகவும் சுத்தமாகவும் இருப்பதை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

சமையலறை மிகவும் துாய்மையாக பராமரிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் உணவுகள் வழங்க வேண்டும் எஎன்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் சுப்ராயலு, நகராட்சி கமிஷனர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

சங்கராபுரம் சங்கராபுரம் பேரூராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி சேர்மன் ரோஜாரமணி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சங்கரன், துணைத் தலைவர் ஆஷாபீ முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பேரூராட்சியில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. நகர செயலாளர் துறை தாகப்பிள்ளை, வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us