/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலூர் டேனிஷ் மிஷன் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கி வைப்பு

ADDED : ஆக 26, 2025 11:50 PM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் , கீழையூர் டேனிஷ் மிஷன் துவக்க பள்ளியில் காலை உணவு திட்டத்தை பொன்முடி எம். எல்.ஏ., துவக்கி வைத்தார்.
அரசு துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விரிவாக்கமாக நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை நேற்று முதல்வர் ஸ்டாலின் துவக்கி வை த்தார்.
இதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர், கீழையூர் டேனிஷ் மிஷன் துவக்கப் பள்ளி, சைலோம் பெண்கள் விடுதி துவக்கப்பள்ளி உள்ளிட்ட இடங்களில், தொகுதி எம்.எல்.ஏ., பொன்முடி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார். சப் கலெக்டர் ஆனந்த் குமார் சிங் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நகராட்சி சேர்மன் முருகன், மாவட்ட ஊராட்சி குழு துணை சேர்மன் தங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், லூயிஸ், நகர மன்ற துணைத் தலைவர் உமாமகேஸ்வரி குணா, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்ட னர்.