ADDED : செப் 22, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
சின்னசேலம்: சின்னசேலத்தில் காமராஜர் காலை உணவு திட்ட துவக்க விழா நடந்தது.
டேனிஷ் மிஷன் உயர்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், சிறுமலர் மேல்நிலைப்பள்ளி என 4 பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 808 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் விழா நடந்தது.
சின்னசேலம் பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ் திட்டத்தை துவக்கி வைத்தார். மகளிர் திட்ட சமுதாய அமைப்பாளர் கார்த்திகா உட்பட பலர் பங்கேற்றனர்.
