ADDED : செப் 23, 2026 05:13 AM
சின்னசேலம்: சின்னசேலம் டேனிஷ் மிஷன் உயர்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், சிறுமலர் மேல்நிலைப்பள்ளி என 4 பள்ளிகளில் காலை உணவு வழங்கும் விழா நடந்தது.
சின்னசேலம் பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ் திட்டத்தை துவக்கி வைத்தார். மகளிர் திட்ட சமுதாய அமைப்பாளர் கார்த்திகா உட்பட பலர் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி அடுத்த குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் துவக்க விழா நடந்தது. தலைமை ஆசிரியர் மணிமாறன் தலைமை தாங்கினார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் ஆனந்தஜோதி, ஹெலன்ஜெயா முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர் அனந்தகிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் அருள்விக்னேஷ் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
ஊராட்சி தலைவர் அனு செல்லப்பிள்ளை, துணைத் தலைவர் சகுந்தலா பழனிசாமி, த.வெ.க., ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், இணைச் செயலாளர் விஜய், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் பூவாய் சக்திவேல், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அறிவழகன், மகாராஜன், சேகர், சுந்தரம், ராஜா, ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
