/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உண்டியல் உடைத்து பணம் திருட்டு
/
உண்டியல் உடைத்து பணம் திருட்டு
ADDED : மார் 30, 2025 11:26 PM

ரிஷிவந்தியம்; பகண்டைகூட்ரோடு அருகே கோவில் உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பகண்டைகூட்ரோடு அருகே பெரிய பகண்டையில் இருந்து மையனுார் செல்லும் சாலையில் பெரியாண்டவர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு முகத்தில் துணி கட்டி கொண்டு, இரு இளைஞர்கள் இரும்பு கம்பியால் கோவில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
தொடர்ந்து, உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தை திருடி சென்றனர். இந்த சம்பவம் அங்கிருந்த, சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி உள்ளது.
இந்த கோவிலில் கடந்த, 2024ம் ஆண்டு செப்டம்பரில், திருட்டு சம்பவம் நடந்தது.
அதேபோல, பெரியபகண்டை ஏரிக்கரையில் உள்ள முருகன் கோவிலில், உண்டியல் குடம் திருடு போனது.
இதுகுறித்து பகண்டைகூட்ரோடு போலீசார் விசாரிக்கின்றனர்.