/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மெடிக்கலுக்கு வைக்கப்பட்ட 'சீல்' உடைப்பு: போலீசார் விசாரணை
/
மெடிக்கலுக்கு வைக்கப்பட்ட 'சீல்' உடைப்பு: போலீசார் விசாரணை
மெடிக்கலுக்கு வைக்கப்பட்ட 'சீல்' உடைப்பு: போலீசார் விசாரணை
மெடிக்கலுக்கு வைக்கப்பட்ட 'சீல்' உடைப்பு: போலீசார் விசாரணை
ADDED : டிச 22, 2024 08:20 AM
கள்ளக்குறிச்சி : விருகாவூரில் மெடிக்கலுக்கு வைக்கப்பட்ட 'சீல்'லை உடைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூரில் உள்ள தனியார் மெடிக்கலில் காலாவதியான மருந்துகள் விற்பனை செய்வதாக கடந்த ஜூன் மாதம் புகார் எழுந்தது. அதன்பேரில், ஜூன் மாதம் 10ம் தேதி சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, மெடிக்கலுக்கு 'சீல்' வைத்தனர். தற்போது வரை மெடிக்கல் திறக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி மெடிக்கலுக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் வைத்த 'சீல்'லை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இது குறித்து விருகாவூர் வி.ஏ.ஓ., மஞ்சுளாதேவி அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து 'சீல்' உடைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.