ADDED : ஏப் 01, 2026 05:48 AM

அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கோடை காலம் துவங்கியதால், கள்ளக்குறிச்சியில் விவசாய தொழிலுக்கு மாற்றாக செங்கல் சூளை பணிகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளது.
கள்ளக்குறிச்சி பகுதிகளில் விவசாய தொழில் பிரதானமாக உள்ளது. போதுமான பருவமழை இல்லாததால், நீர் நிலைகள் முழுமையாக நிரம்பாமல் உள்ளது. இந்நிலையில் தற்போது கோடைக்காலம் துவங்கிவிட்டதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற அச்சத்தில் ஆறு, ஏரி நீர்ப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள், மாற்றுத் தொழிலுக்கு தயாராகி வருகின்றனர். அதன்படி விவசாய நிலத்தில் செங்கல் சூளைகள் அமைத்து பருவநிலைக்கு ஏற்றவாறு வருமானம் ஈட்டுவதற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள பகுதியிலிருந்து செம்மண் சேகரித்து செங்கல் சூளைகள் அமைத்து பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.
