/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
செங்கல் லோடு டிராக்டர் மோதி மின் கம்பங்கள் சேதம்
/
செங்கல் லோடு டிராக்டர் மோதி மின் கம்பங்கள் சேதம்
ADDED : ஏப் 28, 2025 10:19 PM

சங்கராபுரம்,:
சங்கராபுரம் அருகே செங்கல் லோடு ஏற்றி வந்த டிராக்டர் மோதி 2 மின் கம்பங்கள் சேதமாயின.
சங்கராபுரம் அடுத்த புதுபாலப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அருள். இவருக்கு சொந்தமான டிராக்டரில் டிரைவர் அன்பழகன், 40; என்பவர் செங்கல் ஏற்றிக்கொண்டு பூட்டை கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது டிராக்டர் நிலை தடுமாறி பூட்டை ஏரி அருகே சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் ஒரு மின் கம்பம் டிராக்டர் மீது விழுந்தது. மற்றொரு மின் கம்பம் கிழே சாய்ந்தது.
டிராக்டர் மின் கம்பத்தில் மோதிய உடன் மின்சாரம் நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தில் டிராக்டரில் செங்கல் மீது அமர்ந்து வந்த 3 தொழிலாளர்கள் லேசான காயத்துடன் தப்பினர். தகவலறிந்த மின் வாரிய ஊழியர்கள் சாய்ந்த மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.