ADDED : பிப் 12, 2026 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் கொத்தனார் இறந்தார்.
தியாகதுருகம் அடுத்த புதுப்பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சர்க்கரை மகன் மணிகண்டன், 27; கொத்தனார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து பைக்கில் தியாகதுருகம் சென்றார். எதிரே சென்ற பைக் திடீரென பிரேக் பிடித்ததால், மணிகண்டன் ஓட்டிச் சென்ற பைக் மோதி கிழே விழுந்தார்.
தலைமையில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின்படி தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

