/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புத்த, சமண, சீக்கிய மதத்தினர் புனித பயணத்திற்கு நிதியுதவி
/
புத்த, சமண, சீக்கிய மதத்தினர் புனித பயணத்திற்கு நிதியுதவி
புத்த, சமண, சீக்கிய மதத்தினர் புனித பயணத்திற்கு நிதியுதவி
புத்த, சமண, சீக்கிய மதத்தினர் புனித பயணத்திற்கு நிதியுதவி
ADDED : ஜூலை 15, 2025 10:04 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்த, சமண, சீக்கிய மதத்தினர் புனித பயணம் மேற்கொள்ள நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் கொள்ள, தமிழக அரசு ஆண்டு தோறும் ஒரு நபருக்கு ரூ.10,000 வழங்குகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் புத்த சமண மற்றும் சீக்கியர்கள் விண்ணப்பிக்கலாம். இ.சி.எஸ்., முறையில் நேரடியாக மானியம் வழங்கப்படும். விண்ணப்ப படிவங்கள் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் நவ. 30ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன், ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், சேப்பாக்கம், சென்னை 600 005 என்ற முகவரியில் அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.