/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'பில்ட் எக்ஸ்போ' நிறைவு: எஸ்.பி., பங்கேற்பு
/
'பில்ட் எக்ஸ்போ' நிறைவு: எஸ்.பி., பங்கேற்பு
ADDED : டிச 23, 2024 10:55 PM

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் 'பில்ட் எக்ஸ்போ'வை எஸ்.பி., ரஜத்சதுர்வேதி பார்வையிட்டார்.
கள்ளக்குறிச்சி வி.ஏ.எஸ்., மகாலில் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் நவீன கட்டட தொழில்நுட்ப கண்காட்சியின் நிறைவு விழா நேற்று நடந்தது. மாவட்ட சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சேர்மன் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். எக்ஸ்போ இணை சேர்மன்கள் நக்கீரன், மகேஷ்வரன், ரவி, சந்திரசேகரன், கலைமணி, கண்ணன், கணேசன், சரவணன், சுரேந்திரன், ஷபிமுகமது, இப்ராஹிம், முகமதுஅசேன் முன்னிலை வகித்தனர். செயலாளர் ரவி வரவேற்றார். செயலாளர் அருண்குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.சிறப்பு விருந்தினரான எஸ்.பி., ரஜத்சதுர்வேதி கட்டுமான பொருட்களின் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு பேசினார்.
திருவண்ணாமலை பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர் பரிதி, சேலம் சூர்யா பில்டர்ஸ் சட்ட ஆலோசகர் சங்கர், புதுச்சேரி சோமெனி டைல்ஸ்-தேவகி செராமிக்ஸ் மோகன், கள்ளக்குறிச்சி வசி கிளாஸ் - பிளைவுட்ஸ் முருகன், மகாலட்சுமி டிம்பர் முஸ்தபா, நகர சேர்மன் சுப்ராயலு, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை தலைமை கண் மருத்துவர் நேரு வாழ்த்துரை வழங்கினர்.கண்காட்சியில் சிறப்பாக பணியாற்றியவர்கள் மற்றும் கண்காட்சி அரங்குகளை அழகுற அமைத்தவர்கள் மற்றும் சிறப்பான ஸ்டால்களுக்கும், எக்ஸ்போவில் பணிபுரிந்த பொறியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பொருளாளர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.