sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பாஸ் வழங்கும் முகாம்

/

 மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பாஸ் வழங்கும் முகாம்

 மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பாஸ் வழங்கும் முகாம்

 மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பாஸ் வழங்கும் முகாம்


ADDED : ஜன 22, 2026 05:29 AM

Google News

ADDED : ஜன 22, 2026 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பஸ் பாஸ் வழங்கும் சிறப்பு முகாம் 23 ம் தேதி முதல் துவங்க உள்ளது.

கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;

கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இ சேவை மையத்தில் வரும் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பஸ் பாஸ் வழங்கும் சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், 70 - 100 சதவீதம் கண் பார்வை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாவட்டம் முழுவதும் கட்டணமில்லாமல் பயணிக்கும் வகையில் பஸ் பாஸ் வழங்கப்படும்.

40 - 69 சதவீதம் கண்பார்வை பாதிக்கப்பட்டவர்கள், கை, கால் பாதிப்பு உட்பட மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பணிபுரியும் இடம் அல்லது பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்லும் இடத்திற்கு மட்டும் பஸ் பாஸ் வழங்கப்படும். தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us