/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பஸ் டயர் வெடித்து விபத்து : பெண்கள் காயம்
/
பஸ் டயர் வெடித்து விபத்து : பெண்கள் காயம்
ADDED : ஜூலை 28, 2025 10:09 PM
ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் டயர் வெடித்த விபத்தில், 2 பெண்கள் காயமடைந்தனர்.
விருத்தாச்சலம் தாலுகா, கலர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஜெயக்குமார், 37; தனியார் பஸ் டிரைவர். இவர், கள்ளக்குறிச்சி - திருக்கோவிலுார் மார்க்கமாக செல்லும் தனியார் பஸ்சினை நேற்று ஓட்டினார். மாலை 4:30 மணிக்கு, 30 பயணிகளுடன் தியாகதுருகத்தில் இருந்து ரிஷிவந்தியம் நோக்கி திருக்கோவிலுார் வழியாக பஸ் சென்றது.
ரிஷிவந்தியம் வனப்பகுதி அருகே சென்ற போது பஸ்சின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில், பஸ்சில் பயணித்த சிறுவங்கூரை சேர்ந்த நடேசன் மனைவி கலியம்மாள், 60; பாசாரை சேர்ந்த சந்திரகுமார் மனைவி தாமரைச்செல்வி, 38; ஆகிய இருவருக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
தகவலறிந்த ரிஷிவந்தியம் போலீசார் விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

