/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பஸ் கண்ணாடி உடைப்பு; வாலிபருக்கு வலை
/
பஸ் கண்ணாடி உடைப்பு; வாலிபருக்கு வலை
ADDED : ஜன 21, 2025 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்தூர்பேட்டை; அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீ சார் தேடிவருகின்றனர்.
ஈரோடு அடுத்த வண்ணா துரை புதுார் கிராமத்தை சேர்ந்தவர் சந்திர சேகர், 42; அரசு பஸ் டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு பஸ்சில் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னைக்கு புறப்பட்டார்.
நேற்று காலை 5.30 மணிக்கு உளுந்தூர்பேட்டையில் விருத்தாசலம் சாலை சந்திப்பு அருகே சென்றபோது, கடலூர் மாவட்டம் வன்னியர்புரத்தை சேர்ந்த வேல்முருகன், 37; அரசு பஸ் மீது கல் வீசினார். அதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. பயணிகள் காயமின்றி தப்பினர்.
சந்திரசேகர் அளித்த புகாரின் பேரில் உளுதுார் பேட்டை போலீசார் வழக்கு பதிந்து வேல்முருகனை தேடிவருகின்றனர்.